Map Graph

அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி ஆகும். திருநெல்வேலியானது பெரும்பாலும் 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இக்கல்லூரியானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதி கல்லூரியாகும். மேலும் இது தமிழ்நாட்டில் டிஓடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். இது 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்லூரி 23 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் ஐந்து இளநிகலை மற்றும் மூன்று முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இதன் பாடங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.

Read article